சினிமாசெய்திகள்தமிழ்நாடு

விஜய் சேதுபதி மகளை சீண்டிய கொடூரன் இலங்கையில் இருந்து பிடித்து வர தனிப்படை! ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பிய சர்வதேச போலீஸ்!

விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட பாலியல் மிரட்டலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் மகளை அறுவறுக்கத்தக்க, ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்த, இலங்கைச் சேர்ந்த கொடூரனை, பிடிக்க டுவிட்டர் தலைமையகம் முதல், சர்வதேச போலீஸ் வரை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. சர்வதேச போலீஸ் உதவியுடன் அவனை விரைவில் கைது செய்து, சென்னை அழைத்துவர தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 13 ஆம் தேதி 800 என பெயரிடப்பட்ட முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வெளியாகின. இது தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, ரித்திக் என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆபாசக் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இதுவும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக டுவிட்டர் நிர்வாகத்தின் தலைமைக்கும் புகார் அளிக்கப்பட்டது.

ஐ.பி முகவரி மூலம் சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இன்டர்போல் உதவியுடன் Muttiah Muralitharanஅவரைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரித்திக்கை பிடிக்க இண்டெர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன்மூலம் அந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நபர் இலங்கை போலீசாரிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டால், இலங்கை நீதிமன்றத்தின் மூலம் அந்த நபரை சென்னை கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. அதே நேரம் அந்த நபர் தன்மீதான குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல், நீதிமன்றத்தை நாடினால், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும், சென்னை காவல்துறை, சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சமூகத்தில் மிகப்பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இதைப்போல ஒவ்வொரு நாளும் நடக்கும் பாலியல் குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Related Articles

8 Comments

 1. Very good website you have here but I was wanting to know if you knew of
  any community forums that cover the same topics talked about here?
  I’d really love to be a part of community where I
  can get feed-back from other knowledgeable people that share
  the same interest. If you have any recommendations, please let me know.
  Appreciate it!

 2. I really like your blog.. very nice colors & theme. Did you make this website yourself
  or did you hire someone to do it for you? Plz answer back as
  I’m looking to construct my own blog and would like to find out where u got
  this from. kudos

 3. Have you ever thought about creating an e-book or guest authoring on other sites?
  I have a blog centered on the same subjects you discuss and
  would really like to have you share some stories/information. I
  know my subscribers would appreciate your work.
  If you are even remotely interested, feel free to shoot me
  an e mail.

 4. Howdy just wanted to give you a quick heads up.
  The words in your post seem to be running off the screen in Internet
  explorer. I’m not sure if this is a format issue or something to do with
  internet browser compatibility but I figured I’d post to
  let you know. The design and style look great though! Hope you
  get the problem solved soon. Kudos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button