சினிமாசெய்திகள்

மாலத்தீவை சுற்றி வரும் பாலிவுட் நடிகைகள்..ஒருவேல இதுக்கா இருக்குமோ ?

பாலிவுட் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன் போன்றவர்கள் தான். அவர்கள் உலகளவில் புகழ் பெற்றவர்கள் என்று கூறினால் மிகையாகாது. நடிகர்கள் மட்டும் தான் உலகளவில் புகழடைய முடியும் என்பதை பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பிரியங்கா ஷோப்ரா போன்றவர்கள் முறியடித்துவிட்டனர்.

தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளான ஆலியா, திஷா பட்டானி, கியாரா அத்வானி , ரகுல் ப்ரீத்தி சிங் போன்றவர்களுக்கும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் followers உள்ளனர்.

இப்படி பாலிவுட் நடிகைகள் தங்களின் வேலையில் பிசியாக இருந்தாலும் இயற்கையோடு நேரம் செலவிடுவதை தவிர்ப்பதில்லை.எனவே மனதை கவரும் இடமான மாலத்தீவுக்கு அடிக்கடி பறந்துவிடுகின்றனர்.

நடிகை திஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் கடலில் நின்றபடி ப்ளூ நிற ஆடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதற்கு வாவ்,சூப்பர் என கமெண்ட்களை ரசிகர்கள் அல்லி வீசுகின்றனர்.அதே போல் ரகுல் ப்ரீத்தி சிங்கும் கடற்கரையில் யோகா செய்வது போல் புகைப்படம் வெளியிட்டு அசத்தியுள்ளார்.

மேலும் சமீபத்தில் திருமணமான காஜல் அகர்வால் தனது ஹனிமூனுக்கு மாலத்திவுக்கு தான் சென்று வந்தார்.அதற்கு அவர் 40 லட்சம் செலவிட்டார் என சில செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button