கரூரில் இளைஞர் கல்லால் அடித்துக் கொலை – சாதிமாறி காதலித்ததால் கொடூரம்
சாதி ஆணவக் கொலை கரூரில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் சாலையில் வசிக்கும் ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன். இவர் மேட்டுத் தெரு பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். அதே பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மீனா என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் காதல் விவகாரம் மீனாவின் பெற்றோர்களுக்கு தெரிய வரவே மீனாவை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது…..
ஆனால் மீனாவை பார்க்க முடியாததால் தவித்த காதலன் ஹரிஹரன் எப்படியாவது அவரிடம் பேச முயற்சி செய்துள்ளார்.
அப்படியே இருவரின் காதல் பிரிவு இரண்டு மாதங்களாக தொடர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் மீனாவிடம் பேசிய தீரவேண்டும் என்று பல தடைகளை தாண்டி பேச முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க நினைத்த மீனாவின் பெற்றோர், ஹரிஹரனை சமாதானம் பேச அங்குள்ள கோயில் ஒன்றிக்கு வரவழைத்துள்ளனர்.
இதனை நம்பி அங்கு சென்ற ஹரிஹரனுக்கும், மீனாவின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹரிஹரனை மீனாவின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.
( பிரீத் )
அப்போது திடீரென ஆத்திரமடைந்த மீனாவின் உறவினர்கள், ஸ்டிக்கர் வெட்டும் கத்தியால் ஹரிஹரனனின் முதுகில் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் சித்தப்பா சங்கர் , தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாகியுள்ள தந்தை வேலன், சித்தப்பா முத்து இருவரையும் தேடி வருகின்றனர்…
காதலுக்காக சாமாதானம் பேச சென்ற இளைஞரை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து ஒரு குடும்பத்தினேரே ஒன்று கூடி வெட்டி சாய்த்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….