தமிழ்நாடு

ஈமச்சடங்கு மானியத் தொகை ரூ.5,000 ஆக அதிகரிப்பு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான ஈமச் சடங்கு மானியத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுவரை வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரத்து 500 ரூபாய் என்ற ஈமச் சடங்கு மானியத் தொகையானது இனிமேல், 5 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அவர்களுக்கான ஆண்டு வருமான வரம்புத் தொகையானது 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button