தென்மாவட்ட மக்களின் கவனத்திற்கு… இந்த 4 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம்….

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் காரணமாக சென்னை – திருநெல்வேலி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கங்கைகொண்டன் – திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி – கடம்பூர் நிலையங்களுக்கு இடையில் தற்போது இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, விரைவு ரயில்களின் சேவையில் பின்வரும் மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி பிப்ரவரி 23, 24, 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ்(02631) , திருநெல்வேலியில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (02632) ஆகிய ரயில்கள் மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.
முன்னதாக 24, 25, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் சிறப்பு ரயில் விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்லும் எனவும், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Spot on with this write-up, I honestly think this website needs much more attention. I’ll probably be returning to read through more, thanks for the information!
I’ll immediately take hold of your rss feed as I can’t find your email subscription link
or e-newsletter service. Do you’ve any? Kindly let me recognise in order that I may subscribe.
Thanks.