தமிழ்நாடு

பகல் வேஷம் போடுகிறார் மு.க.ஸ்டாலின்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தேர்தலின் போது அதிமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகவும், திமுகவினர் அப்பாவி மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று 2வது நாளாக முதலமைச்சர் பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக புளியகுளம் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிப்பட்ட பின்னர் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். கடவுளை இழிவாக பேசி வருவபவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர் கையில் வேலை எடுக்கிறார்.

இவர் மக்கள் மத்தியில் ‘ பகல் வேஷம் போட்டு வேலை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.மேலும் ஸ்டாலின் வேலை எடுத்தாலும் முருகனின் வரம் அதிமுகவுக்கு இருப்பதால் வெற்றியை முருகன் அள்ளி தருவார் என்று தெரிவித்தார்.

தைப்பூச திருநாளை அரசு விடுமுறை என அறிவித்தது அதிமுக தான். எங்களை பொறுத்தவரை அனைத்து மதமும் சமம், அவரவர் மதம் , கடவுள் அவரவர்களுக்கு புனிதமானது. சிறுபான்மை மக்களின் நலனை அதிமுக தான் காப்பாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்

இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தினை மேற்கொண்ட முதலமைச்சர் 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.மேலும் திமுக, அப்பாவி மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

 

Related Articles

8 Comments

  1. Thank you a bunch for sharing this with all folks you actually understand what you’re speaking approximately!
    Bookmarked. Please additionally talk over with my website =).
    We may have a link exchange agreement among us

  2. Heya i am for the primary time here. I came across this board and I to find It really helpful & it helped me out a
    lot. I hope to offer one thing back and aid others like
    you helped me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button