பொழுதுபோக்கு

மிரட்டும் கெட்டப்பில் விக்ரம்… வெளியானது கோப்ரா படத்தின் டீசர்… வீடியோ உள்ளே…

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் “கோப்ரா”. இப்படத்தில் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த 6 ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாளையையொட்டி படத்தின் டீசர் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தில் விக்ரம் பலவிதமான கெட்டப்களில் நடித்து வருகிறார்.மேலும் நீண்ட நாட்களாக அவர் ஒரு ஹிட் கொடுத்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதால் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இது ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் கணித ஆசிரியரான விக்ரம், எண்கள் மூலம் கிரைம் செய்வது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் ரசிகர்கள் #ChiyaanVikram, #CobraTeaser என்ற ஹேஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button