சென்னைதமிழ்நாடு

தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-சென்னையில் நேற்று ஒரு நாளில் 756 பேருக்கு கொரோனா!!!

தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று இரண்டாயிரத்து 652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது. இதையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தமிழகம் முழுவதும் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், நேற்று ஒரே நாளில் நான்காயிரத்து 87 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் நேற்று 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

40 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button