தமிழ்நாடுமருத்துவம்

சென்னைக்கு வந்த ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி; பரிசோதனை எப்போது?

கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் படி இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு என்னும் கொரோனா தடுப்பூசி உலக அளவில் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூதியாகும்.

அந்தத் தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனிடையே இந்தியா கண்டுபிடித்த கோவாக்சின் மருந்து பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. கோவிஷீல்டு பரிசோதனையை செய்ய ஐ.சி.எம்.ஆர் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தேர்ந்தெடுத்தது. அதன் படி சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆரோக்கியமாக இருக்கும் 300 பேருக்கு இந்த தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆக்ஸ்போர்டு பல்கலை, கண்டுபிடித்துள்ள இந்த கோவிஷீல்டு மருந்து, மனித உடலில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும் என்றும் கொரோனா பாதிக்கப்பட்ட செல்களை 28 நாட்களில் தடுக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், பரிசோதனை செய்வதற்காக 200 கோவிஷீல்டு தடுப்பூசி சென்னைக்கு வந்தடைந்துள்ளது. புனேவில் இருந்து சென்னை வந்த மருந்துகளின் பரிசோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

25 Comments

  1. I?m amazed, I have to claim. Truly rarely do I come across a blog that?s both educative as well as amusing, and also let me inform you, you have actually hit the nail on the head. Your suggestio
    부산달리기n is exceptional; the concern is something that not nearly enough individuals are speaking smartly about. I am very happy that I came across this in my look for something connecting to this.

  2. Can I just say what a relief to find someone who actually knows what theyre talking about on the internet. You definitely know how to bring an issue to light and make it important. More people need to read this and understand this side of the story. I cant believe youre not more popular because you definitely have the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button