இந்த costume-ல கல்யாணம் செஞ்ச முதல் தம்பதி இவங்க தான்..வைரல் புகைப்படம்

ராஜஸ்தானில் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதுகாப்பு உடை அணிந்து திருமணம் செய்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் ஷாபாத் நகரில் வசிக்கும் இருவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்கு முன்னதாக மணமகனும், மணமகளும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் திருமணம் அன்று மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார் திருமணத்தை பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்துள்ளனர்.மணமக்கள் இருவருக்கும் கொரோனா தடுப்பு தனிநபர் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.இந்த உடையிலேயே சடங்குகள் அனைத்தையும் செய்து திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.மேலும் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த பண்டிதரும் பாதுகாப்பு உடை அணிந்தே திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.கொரோனா பாதிப்பிலும் திருமணம் செய்துக்கொண்ட இந்த தம்பதியரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Those are yours alright! . We at least need to get these people stealing images to start blogging! They probably just did a image search and grabbed them. They look good though!