டெல்டா கொரோனாவுக்கு எதிராக செயல்படும் கொவாக்சின் ... ஆய்வில் தகவல்

இந்தியாவில் தற்போது பேரிழப்பை ஏற்படுத்தி வரும் டெல்டா ரக கொரோனாவுக்கு எதிரான செயல்திறனை கோவாக்சின் தடுப்பூசி பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்டா கொரோனாவுக்கு எதிராக செயல்படும் கொவாக்சின் ... ஆய்வில் தகவல்

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.2 மற்றும் B.1. 351 மாறுப்பாட்டுக்கு டெல்டா மற்றும் பீட்டா என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது.

இதில் இந்தியாவில் தற்போது பேரிழப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாம் அலைக்கு டெல்டா மாறுமாடே காரணம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி டெல்டா மாறுபாட்டை எதிர்க்கக்கூடிய செயல்திறனை பெற்றுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூயின் திறனை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவலானது தெரியவந்துள்ளது