“செம காட்டு”.. 11 அமைச்சர்கள் காலி… கடைசி வரைக்கும் திணறித் திணறி தோற்றுப் போன பயங்கரம்.. சுத்தி சுத்தி அடிச்ச திமுக!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவின் கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மட்டுமே 66 தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பிவேலுமணி, தங்கமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் வென்றுள்ளனர். இதில் 11 அமைச்சர்கள் கடைசி ரவுண்ட் வரை தித் திக் மோடில் இருந்தே தோல்வியடைந்துள்ளனர்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமார் 36,224 வாக்குகளும், இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஐட்ரீம் இரா. மூர்த்தி 63,811 வாக்குகள் பெற்று சுமார் 27,587 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 94,141 வாக்குகளும், இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஆவடி நாசர் 1,47,415 வாக்குகள் பெற்று 53,247 வாக்கு வித்திட்டயாசத்தில் வென்றுள்ளார்.

மதுரவாயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் 88,166 வாக்குகளும், இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட காரப்பாக்கம் கணபதி 1,19,397 வாக்குகள் பெற்று 31,231 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கே.சி.வீரமணி 87,118 வாக்குகளும், இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தேவராஜ் 88,024 வாக்குகள் பெற்று 906 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.

ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 68,377 வாக்குகளும், இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தங்கபாண்டியன் 72,035 வாக்குகள் பெற்று 3,658 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் 85,713 வாக்குகளும், இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.லட்சுமணன் 1,01,100 வாக்குகள் பெற்று சுமார் 15,387 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சரோஜா 77,211 வாக்குகளும், இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட மதிவேந்தன் 77,438 வாக்குகள் பெற்று சுமார் 227 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் 79,412 வாக்குகளும், இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட அய்யப்பன் 84,563 வாக்குகள் பெற்று சுமார் 5,151 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 40,505 வாக்குகளும், அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் பெற்று சுமார் 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

Back to top button