க்யாரே செட்டிங்கா? பாஜகவுக்கு டெபாசிட் போவது உறுதி!! சோசியல் மீடியாவில் அல்லு கிளப்பும் உ.பிகள்!

சட்டமன்ற தேர்தலுக்கு இடையே, எதிர்கட்சி கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் ஐ.டி ரெய்டினை கிண்டலடித்து வரும் நெட்டிசன்கள், அவர்கள் மத்திய அரசு அதிகாரிகளா அல்லது பாஜகவின் வேலைக்காரர்களா என சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடப்பு தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது முதல், ‘தீயா வேலை செய் குமாரு’ங்கிற பாணியில கட்சியினர் தீயா பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக கட்சியில ‘வாரிசு அரசியல்’ என தொண்டர்கள் புலம்பிக்கொண்டிருந்த சூழலில், தற்போது வாரிசு அரசியல் தான் புயலாய் பிரச்சாரம் செய்து வருகிறதாம். அமித்ஷா, மோடி என உயர்மட்டத்தில் உள்ளவர்களையே ஸ்டாலினின் வாரிசான உதயநிதி சீண்டி வருகிறாராம். இதனால் கட்சியில் அவருக்கான சிறப்பும் ஏறிக்கொண்டே போகிறதாம்.

அண்மையில் ‘ஜெய் ஷா வாரிசு கிடையாதா? அவரின் சொத்து மதிப்பு என்ன? அத்வானியை மோடி ஓரம்கட்டியது ஏன்? என்றெல்லாம் கேள்விகளை கேட்டு பாஜகவை உதயநிதி துழைத்தெடுத்துள்ளார். அரசியலில் இவரது வேகமான வளர்ச்சித்தான், மத்திய அரசின் பார்வை உதயநிதி மீது படக்காரணம் என கூறப்படுகிறது. ஸ்டாலினைவிட உதயநிதியே பிரச்சார களத்தை கலக்கி, எதிரணியை கதிகலங்க வைத்துள்ளாராம். அவரது பேச்சு தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் வைரலாகிறதாம். குறிப்பாக செங்கல் மேட்டர் செம டிரெண்டிங்காம்..

அதுமட்டுமல்லாது, தற்போதைய நிலவரப்படி திமுக வெற்றி பெறுவதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதை அறிந்ததும், மத்திய அரசு தனது கைவரிசையை காட்டத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியே ரெய்டு என வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிடுகின்றனர்.

குறிப்பாக சோதனை நடத்தப்படும் இடங்களிலும் துணை ராணுவமும் பாதுகாப்புக்கு குவிக்கப்படுகிறதாம். கடந்த மாதம் தாராபுரத்தில் எல்.முருகனை(பாஜக) எதிர்த்து போட்டியிடும் திமுகவின் கயல்விழி செல்வராஜ், மதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.

அதன்பின் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை, பைனான்ஸ் நிறுவனம் திருவண்ணாமலை மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகள் உள்ளிட்ட 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர்.

அதிமுக பாஜக கூட்டணியை எதிர்த்து தேர்தல் களம் காணும், திமுக கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியினரையே குறிவைத்து இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக, பாமக, பாஜக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை இல்லை என்பதால் இது பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை வலைதளத்தில் கிண்டல் செய்யும் பொதுமக்கள், ஆட்சியில் இருப்போர் கொள்ளையடித்த பணத்திற்கு ரெய்டு இல்லை…பத்து வருஷமா எதிர் கட்சில இருக்கிறவங்க மேல ரெய்டா.. கோழையை பாத்திருக்கோம்…. ஹிட்லர் முசோலினி எவ்ளோவோ பெட்டெர்… பயம் படுத்தும் பாட்டை பாருங்க! இது என்ன எல்லாமே ஒரே சைடா இருக்கே?? மத்திய அரசு அதிகாரிகளா இல்லை பாஜக வேலைக்காரர்களா? அதிமுவுல ஒருத்தனையும் கண்டுக்கல! வாழ்க ஜனநாயகம் என ட்வீட் தட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த செயல் பி.கே.யின் திட்டம் எனவும், சிறப்பாக ஒர்க்கவுட் ஆவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கோபத்தை எழுப்பும் எனவும், இது திமுகவுக்கே கூடுதல் பலத்தை சேர்க்கும் எனவும், பாஜக இலவசமாக விளம்பரம் செய்தமைக்கு நன்றி எனவும் உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.