ராஜபாளையத்தில் ரணகளம் பண்ணிய ராஜேந்திர பாலாஜி… பிரச்சாரத்திற்கு ஆப்சென்ட் போட்ட உபிக்கள்!!

அரசியல்வாதிகள் என்றால் தேர்தல் காலங்களில் கைகூப்பியபடி வருவார்கள், கஷ்ட காலங்களில் கைப்பிடி உதவியோடு வருவார்கள்! அதையும் கடலளவு செய்தது போல் ஸீன் செய்து கொள்வார்கள்! எனும் விமர்சனம் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் விதி! என்பார்கள். ஆனால், அந்த விதியிலும் சில விலக்குகள் இருக்கத்தானே செய்யும்! அப்படியொரு விதிவிலக்கு அரசியல் புள்ளிதான் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி.

ஆளும் தரப்பை சேர்ந்தவர்களில் அமைச்சர்கள் சிலர்தான் தி.மு.க.வுக்கு எதிராக மிகத்துடிப்பாக முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி. தி.மு.க.வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் இப்படித்தான் என்றில்லாமல் எப்படி வேண்டுமானாலும் வெச்சுக் கிழி கிழி என கிழிப்பதில் சிவகாசியின் ஹெவி வெயிட் பட்டாசு இவர்.

அதேபோல் மிக ஜனரஞ்சகமாகவும், திருப்பி போட்டுத்தாக்க முடியாதவாறும், பயங்கர ஜாலியான வார்த்தைகளிலுமாய் போட்டுத் தாக்குவார். அப்படித்தான் இப்போது ஸ்டாலினுக்கு எதிராக கடந்த 5 வருஷமா தலைவலியை கொடுத்தவர். அதேபோல தேர்தல் முடிவையும் இப்போதே மாற்றிக்காட்டிவிட்டார்.

ஆமாம்… இந்த தகவல் திமுக வட்டாரத்தை கொஞ்சம் டென்ஷானாக்கியிருக்கும் என்றுதான் சொல்லணும்… தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்து யாருடைய ஆட்சி நடைபெறும் என்ற கேள்வி அனைத்து மக்கள் மனதிலும் இருந்திருக்கும். மீண்டும் ஆட்சிக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க நட்சத்திர தொகுதியான இராஜபாளையம் தொகுதியில் இரவோடு இரவாக அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. மன்னிக்கணும் தனக்கே உரிய ஸ்டைலில் கருத்துக்கணிப்பு எல்லாமே பொய் என மொத்த அரசியல் கட்சிகளை மெர்சலாக்கியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், தொகுதி மக்களின் மனநிலையை கனிப்பது சற்று கடினமான விஷயமாக இருந்தது, ஆனால் இரவோடு இரவாக தொகுதி நிலவரம் அதிமுகவிற்கு ஆதரவாக மாறியுள்ளது திமுகவிற்கு அல்லு கிளப்பியுள்ளது.

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், திமுக சார்பில் தங்கபாண்டியனும் போட்டியிடுக்கின்றனர், ராஜபாளையம் தொகுதி குறித்து வெளியான பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தொகுதியில் இழுபறி நீடிப்பதாகவும், இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வாக்கு 5 ஆயிரத்திற்கு குறைவாக இருக்கும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியானது.

ஆனால் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பணியாற்றியது, நிர்வாகிகளை முறையாக கையாண்டது, தனது பிரச்சாரம் அனைத்து ராஜபாளையம் மக்களுக்கும் செல்லவேண்டும் என சமூக ஊடகங்களை முறையாக கையாண்டது என அமைச்சரின் அதிரடியான பிரச்சார வியூகங்கள் தொகுதி மக்களை வியக்க வைத்தது.

தேர்தல் களத்தில் ராஜபாளையமே எனது “ராஜ ஆலயம்” என தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதிமுகவினர் செல்லாத இடங்களே தொகுதியில் இல்லை என்ற நிலை கடந்த மூன்று நாட்களில் அரங்கேறியுள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு நாளை ஒருநாள் மீதமுள்ள நிலையில் திமுகவினர் தோல்வியை ஒப்புக்கொண்டது போல வீட்டில் முடங்கி இருப்பது, அதிமுகவின் வெற்றியை ராஜபாளையத்தில் மீண்டும் அரங்கேற உறுதுணையாக அமைந்துள்ளது. அமைச்சர் தொகுதி என்பதால் வெற்றி பெற்றால் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறைந்தது 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிகிறது ஒரே நாளில் தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகளை தனக்காக்கிக்கொண்டதால் டறியலாகிக்கிடக்கிறது திமுக.