காலம் போன காலத்துல காமம்… தின்பண்டத்தை காட்டி சிறுமியை சிதைத்த கொடூரர்கள்..

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே, சிறுமிக்கு தின்பண்டம் வாங்கிக்கொடுத்து, தனியே வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடமதுரை அருகே உள்ள ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. எட்டாம் வகுப்பு படிக்கும் இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அண்மையில் இவரை அதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளியான தங்கவேல் என்பவர் அடிக்கடி வீட்டுக்கு அழைத்து செல்வதாக அப்பகுதியினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், கடந்த 8 மாதங்களாக 3 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் சிறுமி, தங்கவேல் அடிக்கடி தின்பண்டங்களுடன் வீட்டுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். பின் அப்படியே அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். நாளடைவில் தங்கவேலின் இந்த செயலை கேள்விப்பட்டு அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (65), குருநாதன் (70) ஆகியோரும் சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை வீட்டில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.

மகளின் இந்த பாதிப்பு நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து அப்பகுதி வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 3 மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Back to top button