குளியலுக்கு இடையூறு செய்த சமையலர்: கொளுத்திய ஆசிரியர்

அரசு பள்ளி விடுதியில் அறக்குறையாக குளியலிட்ட பள்ளி ஆசிரியரை கண்டித்த சமலையலரின் வாகனம் தீவைக்கப்பட்ட சம்பவம் இராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

இராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதியில் அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சமையலராக செல்வ தேவேந்திரன் பணியாற்றி வருகிறார். அண்மையில் விடுதியில் தங்கி ஆசிரியர் பணியாற்றும் சுரேஷ் என்பவர், பொது குளியல் தொட்டியில் அரக்குறையாக குளித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட சமையலர், அவரை நாகரீகமான முறையில் குளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சுரேஷ் சமையலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின் சமையலர் விடுதிக்கு சென்றபோதும், விடாது அவரை பின்தொடர்ந்த ஆசிரியர் அவரை தாக்கியுள்ளார். இதனால் பயத்தில் சமையலர் தன் அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டுள்ளார்.

இதையடுத்து, ஆத்திரத்தின் உச்சியில் இருந்த சுரேஷ், அறைக்கு வெளியே இருந்த சமையலரின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதனைக்கண்டு அறையை விட்டு வெளியேறிய சமையலர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதன்பேரில் சுரேஷ் மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட ராஜா ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.