சென்னை கோடம்பாக்கம், ட்ரஸ்ட்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். 28 வயதான இவர் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகி, மனைவியுடன் கருத்து வேறுபாடு எழுந்தது.
இதனால் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, பார்த்திபன் தன் இச்சையை தீர்ப்பதற்கு பிற பெண்களை குறி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதிகாலையிலேயே எழுந்து சுறுசுறுப்பாக கிளம்புவார். வேலைக்குதான் செல்கிறார் என பார்த்தால், அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்களை நோட்டமிட்டு வந்துள்ளார்.
காலையில் வாசலில் கோலமிடும் பெண்கள், தண்ணீர் குடம் சுமக்கும் பெண்களை நோட்டமிட்டு வந்த பார்த்திபன், வீடுகளில் குளிப்பதையும் எட்டிப் பார்த்து வந்துள்ளா
இவ்வாறு 24 மணி நேரமும் பெண் போதையில் இருந்த பார்த்திபன், அதே பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண்மணியை கவனித்துள்ளார். அவரது கணவர் அதிகாலையிலேயே எழுந்து தினசரி பேப்பர் போடும் வேலைக்கு சென்று விடுவார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 19-ம் தேதியன்று அந்த பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டவர், திடீரென அவரது வீட்டின் கதவை தட்டினார். அந்த பெண்ணும், தனது கணவர்தான் வந்திருப்பதாக எண்ணி கதவை திறந்தார்.
ஆனால் கதவைத் திறந்தவுடன் பாய்ந்த பார்த்திபன், உட்பக்கமாக பூட்டிக் கொண்டு பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டதோடு, பார்த்திபனின் கையை கடித்து விட்டு கதவை திறந்து வெளியே ஓடி தப்பினார்.
இதுகுறித்து அந்த பெண், தன் கணவருடன் சென்று கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், போலீசார் பார்த்திபனை கைது செய்தனர். காவல்துறையினர் தன்னை நெருங்குவதை அறிந்த பார்த்திபன், பயந்து நடுரோட்டில் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்.
ஆனால் திடீரென கால் தவறி தலை குப்புற விழுந்த பார்த்திபனுக்கு வலது கை ஏடாகூடமாக பிசகியது. இதையடுத்து அவரை தூக்கிச் சென்ற போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து மாவுக்கட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.