“அழைப்பிதழ்” கொடுக்க சென்ற இருவர்: கார் டயர் வெடித்து உயிரிழந்த சோகம்..

திருச்சி மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழை கொடுக்க தனது உறவினாரான சண்முகம் என்பவருடன் மணப்பாறையில் உள்ள உறவினர்களுக்கு கொடுத்து விட்டு மீண்டும் இருவரும் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மினிக்கியூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மகாலிங்கம், சண்முகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Back to top button