குடும்பத்தகராறு காரணமாக தம்பதியினர் வெட்டிக்கொலை – நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் குடும்பத்தகராறு காரணமாக மகள் மற்றும் மருமகனை மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த சீதற்பநல்லூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் நந்தன் கோட்டை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாமனார் மருமகன் இடையே அடிக்கடி சண்டை நடைப்பெற்று வந்துள்ளது.

இதனிடேயே காலையில் குழந்தைகளுடன் மாமனார் புலேந்திரன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வம் தன் குழந்தைகளை கொஞ்சக் கூடாது என சண்டையிட்டுள்ளார்.

இந்த சண்டை சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்த அரிவாளை எடுத்து புலேந்திரன் தனது மருமகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற தனது மகள் மஞ்சுவினையும் வெட்டியுள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.