‘வலிக்குதுப்பா’ கதறிய சிறுமி… கள்ளக்காதல் மயக்கத்தில் மகளை பறிக்கொடுத்த பெண்….

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரனை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவன் அலெக்ஸ். இவனுக்கும் அதே பகுதியில் திருமணமாகி 5 மற்றும் 3 வயதிலான பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டுபிடித்த பெண்ணின் கணவர் அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் அலெக்ஸ் மீதான காதல் மயக்கத்தில் இருந்த பெண், அதனை ஏற்காது தனது 5 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொண்ட அலெக்ஸ், 5 வயது சிறுமியை தனது மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்து, அவர்களை அழைத்துக்கொண்டு கேரளாவில் உள்ள பத்தினம்திட்டாவில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளான். ஆனால் அதன் பின் அவன் வேலைக்கு செல்லாமல், கஞ்சா, போதை மயக்கத்தில் வீட்டிலேயே இருந்துள்ளான்.

இதனால் வீட்டு செலவை கவனித்துக்கொள்வதற்காக அப்பெண் தனது மகளை வீட்டில் விட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் அவர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டில் மகள் மயங்கிய நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்த அப்பெண், உடனடியாக மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் உடல் முழுவதும் நகக்கீரல்கள் மற்றும் ஆங்காங்கே பற்களால் கொடூரமாக கடித்த தடங்களும் இருந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போதையில் தானே சிறுமியை பலாத்காரம் செய்ததாக அலெக்ஸ் அளித்த தகவலை தொடர்ந்து, போலீசார் அவனை கைது செய்தனர்.