மச்சினிச்சியை கொடுக்க மறுத்த மாமனார்…. மனைவியை அணுஅணுவாக சித்தரவதை செய்த கணவர்

தூத்துக்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் சுஜா என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம் மணிப்பாறைப்பட்டியைச் சேர்ந்த  வீரராகவனுக்கும் கடந்த 2019ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் வீரராகவனின் தம்பி கார்த்திக் என்பவருக்கு சுஜாவின் தங்கையை பெண் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சுஜாவின் குடும்பத்தினர் மறுக்கவே வீரராகவன், அவரது பெற்றோர் ஆகியோர் சுஜாவை டார்ச்சர் செய்ய தொடங்கியுள்ளனர்.

மேலும் வீரராகவனின் சில உறவினர்களும் சுஜாவிற்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கிய நிலையில், சுஜாவிடம் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தொந்தரவு அதிகரிக்கவே கடந்த ஏப்ரல் 19ம் தேதி தனது குழந்தையுடன் சுஜா, பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு கணவனுடன் சுஜா செல்போனில் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் விரக்தி அடைந்த சுஜா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Back to top button