கிரைம்

மா இலை பறித்ததற்காக தாக்குதல் – அவமானத்தில் தூக்கில் தொங்கிய தலித் இளைஞர்

ஆடுகளுக்கு போடுவதற்காக மா இலை பறித்துள்ளார்

உத்தரப்பிரதேசத்தில் மரத்தில் இலை பறித்ததற்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில்  உள்ள ஆஸ்தா கிராமத்தில் தாரம்பல் திவாகர் என்ற 26 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் ஆடுமேய்ப்பதை தொழிலாக பார்த்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல ஆடுகளை மேய்த்துச் சென்ற அந்த இளைஞர், அவைகளுக்கு உணவளிக்க அருகிலுள்ள மாமரத்தில் இருந்து இலைகளை பறித்ததாகவும், அதனை கண்டித்து அக்கிராமத்தினர் சிலர் தாரம்பாலை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது அறைக்குச் சென்ற தாரம்பால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து மல்வான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button