Uncategorized

physiotherapist-ஐ திருமணம் செய்து கொண்டாரா பிரபுதேவா ?

நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா தனக்கு சிகிச்சை அளித்த physiotherapist-ஐ திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

பிரபு தேவா 1994 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.பின்பு மின்சார கனவு, சுயம் வரம், வானத்தைப் போல என பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.இயக்குனராக அவர் இயக்கிய போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு பிரபு தேவாவுக்கும் அவரின் மனைவிக்கும் விவாகரத்து ஆனது.பின்பு நயன்தாராவுடன் சில நாட்கள் வாழ்ந்து வந்தார்.ஆனால் அவர்களும் மன கசப்பால் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் விவாகரத்தாகி 9 ஆண்டுகள் கழித்து பிரபுதேவா மும்பையில் தனக்கு சிகிச்சை அளித்த physiotherapist-ஐ திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த திருமணம் அவர்களின் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நடந்ததாக செய்திகள் பரவி வருகிறது.ஆனால் இது குறித்து பிரபு தேவா தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button