கல்வி வேலை வாய்ப்புதமிழ்நாடு

மாணவர்கள் இடையே குறையும் பொறியியல் மோகம்-ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து வரும் மாணவர் சேர்க்கை;

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 பொறியியல் படிப்புக்கான இடங்களில் தற்போது வரை 43 ஆயிரத்து 367 இடங்கள்தான் நிரம்பி இருப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி துங்கியது.

ஏற்கனவே நடந்து முடிந்த முதற்கட்ட கலந்தாய்வில் .7 ஆயிரத்து 510 இடங்கள் மட்டுமே நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் 13 ஆயிரத்து 415 இடங்கள் நிரம்பின.

இந்நிலையில் கடந்த 16 தேதி முதல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு துவங்கி நடைபெற்று வந்தது. அதில் பங்கேற்க 35 ஆயிரத்து133 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 20 ஆயிரத்து 999 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 பொறியியல் படிப்புக்கான இடங்களில் தற்போது வரை 43 ஆயிரத்து 367 இடங்கள்தான் நிரம்பி இருப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் துவங்க உள்ள இறுதிக் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 40 ஆயிரத்து 573 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்து கொள்பவர்களுக்கு 28-ம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

பொறியியல் படிப்புகள் ஒரு காலத்தில் கவுரமாக கருதப்பட்ட நிலையில் தற்போது மாணவர்களிடம் பி.இ படிப்புகளின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நடப்பு கல்வியாண்டில் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button