டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்….. வன்முறை போராட்டத்தில் ஒருவர் பலி…

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில் பங்கர வன்முறை வெடித்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். .
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சிங்கு மற்றும் டிக்ரி எல்லைகளில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் காவல்துறையினர் அனுமதித்த வழித்தடங்களில் செல்லாமல், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வழிகளுக்குள் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் , கண்ணீர் புகை குண்டுகளை வீசவும் செய்தனர். போராட்டம் நடத்தியவர்களில் சிலர் பதிலுக்கு காவல்துறையினரை தாக்கியும், பேருந்துகளை உடைத்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே போராட்டகாரர்களின் மற்றொரு தரப்பினர் டெல்லி செங்கோட்டைக்குள் சுமார் 500-க்கும் அதிகமான டிராக்டர்களுடன் நுழைந்தனர். இதனைதொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் தடிகள், இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதனைதொடர்ந்து போலீசாருக்கும்- போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தை தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது.
overnight cialisis on line Tetracycline cialis results [url=https://xz-pharmacyonline.com]prescription drugs from canada online[/url] ’
online pharmacy cialis cheap buy cialis online overnight delivery cialis generic prices [url=http://sjcialis.com/]where to buy generic cialis ?[/url] ’
http://bio-catalyst.com/ – minocin online
order tinidazole online
[url=http://bio-catalyst.com/]order cefadroxil online[/url] tetracycline online