கவர் ஸ்டோரி

திண்டுக்கலில் இறந்த தாயின் உடலுடன் 22 நாட்கள் இருந்த குழந்தைகள்

தனது தாய் காலையில் சாப்பிட்டதாகவும், மாலை எழுந்து விடுவார் என குழந்தைகள் கூறுவதால் பரபரப்பு

திண்டுக்கலில் இறந்து போன தாயின் உடலுடன் 22 நாட்கள் சகஜமாக இருந்த குழந்தைகளை போலீசார் மீட்ட நிலையில், அந்த குழந்தைகள் தங்களது தாய் மாலை எழுந்து விடுவார் என்றும், காலை சாப்பிட்டதாகவும் கூறுவதால் போலீசார் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்து வந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ்.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,  தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள டிரஸ்சரி காலனி பகுதியில்,  தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக  இந்திராவின் சகோதரி வாசுகியும் இவர்களுடனேயே தங்கிவிட்டார். இந்நிலையில் சிறுநீரக தொற்று  காரணமாக சிகிச்சை பெற்று வந்த காவலர் இந்திரா காவல் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அவர் விருப்ப ஓய்வு பெறுவது குறித்து எந்தவித தகவலையும் தனது மேலதிகாரிகளுக்கு முறையாக தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார். என கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 8ஆம் தேதி    இந்திராவின் வீட்டிற்கு, போலீஸார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பதற்கு  சென்றுள்ளனர்.

ஆனால் அவர் வீட்டில் இல்லை எனக்கூறி இந்திராவின் குழந்தைகள் மற்றும் அவரது சகோதரி போலீசாரை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.  இந்நிலையில்  இன்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தோர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீஸார் , இந்திராணி வீட்டில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இந்திராவின் அழகிய உடல்  துணியால் சுற்றப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து  குழந்தைகளிடம் போலீசார் கேட்ட பொழுது, தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்து விடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள் என சர்வ சாதாரணமாக பதிலளித்துள்ளனர். மேலும் தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், எனது தாயை தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார் என மிரட்டியுள்ளனர்.

இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன் தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளார். உடல் மிகவும் அழகிய காரணத்தினால் வீட்டிலேயே  மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரும் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

மேலும் உடல்நலம் பாதித்த இந்திராவினை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், வீட்டில் வைத்து குணமடைவதற்கு பிரார்த்தனை செய்துள்ளனர். சர்ச் பாதிரியாரின் இந்த தொடர் நடவடிக்கையின் காரணமாக இந்திராவின் இரு குழந்தைகளும் மனதளவில் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த காவலர் இந்திரா கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு பாதிரியாரின் மூலம் மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தாயின் உடலுடன் அவரது இரு குழந்தைகளும் 22 நாட்களாக வீட்டில் இருந்த சம்பவம் திண்டுக்கல்  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடல் அழுகி, முடிகள் உதிர்ந்த நிலையில், இருந்ததால், வீட்டில் வைத்தே பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button