உணவுசென்னைதமிழ்நாடுமற்றவை

திண்டுக்கல் தலப்பாகட்டி உணவு கெட்டு போனதாக புகார்.! – அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி..!

உணவுக்கு பெயர்போன திண்டுக்கல் தலப்பாகட்டியின் கிளைகளில் ஒன்று சென்னை நசரத்பேட்டையில் உள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக எந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிடமுடியாது என்பதால் அனைவரும் பார்சல் வாங்கி கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த சந்தீப் என்ற நபர் நேற்று தனது கைகளில் சாப்பாடு பொட்டலத்துடன் சென்னை நசரத்பேட்டையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகத்தின் முன் நின்று தர்ணா செய்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறிய போது, “நேற்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி உணவகத்தில் செஸ்வான் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், வெஜிடபுள் புலாவ் ஆகியவற்றை பார்சல் வாங்கிச்சென்றேன்.

வீட்டிற்கு சென்று மனைவி குழந்தையுடன் அமர்ந்து சாப்பிட்ட போது தான் நூடுல்ஸ்சில் அழுகிய வாடை அடித்ததாகவும், அதனை சாப்பிட்ட தனது மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சாப்பிடுவதை நிறுத்தினோம்” என்று கூறினார் சந்தீப்.

மேலும் அந்த உணவில் அழுகிய முட்டை கோஸ் போட்டு தயார் செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமின்றி வெஜிடபுள் புலாவ், மஞ்சள் சோறு போல இருந்ததால் அதனையும் முழுவதுமாக சாப்பிடவில்லை என்றும் கூறினார்.

இதனால் கோபமடைந்த சந்தீப் தம்பதியினர், அந்த உணவகத்தில் வந்து நியாயம் கேட்டனர். அதற்கு அந்த உணவகத்தின் நிர்வாகத்தினர் தகுந்த விளக்கம் அளிக்காமல் “ஆமாம் சாப்பாடு சரியில்லை..!” என்று ஒப்புக் கொண்டு, மேற்கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் அவரவர் வேலை பார்க்க தொடங்கி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார் சந்தீப்.

பின்னர் அங்கு வந்த காவல் துறையினரிடம் இந்த உணவகத்தில் தரமற்ற உணவை கொடுத்து ஏமாற்றியதாக புகார் அளித்தனர். மேலும் இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர்.

Related Articles

21 Comments

  1. Thanks a lot for sharing this with all people you actually realize what you are talking about! Bookmarked. Kindly additionally discuss with my website =). We may have a link change contract between us!

  2. Great V I should definitely pronounce, impressed with your website. I had no trouble navigating through all tabs as well as related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, site theme . a tones way for your customer to communicate. Nice task..

  3. I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored material stylish. nonetheless, you command get bought an shakiness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly very often inside case you shield this increase.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button