Uncategorized

25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுப்பு !!!

செங்கல்பட்டு அருகே சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் பின்புறம் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் பின்புறம் முட்புதர்கள் அருகே உள்ள கட்டிடத்தில் உடலில் ரத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

இதனை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்த்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையுண்ட பெண் 25 வயது மதிக்கதக்கவர் என்பதும், கல்லூரி மாணவியாக இருக்கலாம் எனவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் காதலருடன் வந்தாரா? அல்லது கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button