
இன்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு, பல சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக வழிபாடுகள் நடந்தன. குறிப்பாக நந்தி தேவருக்கு சிறப்பு பூஜ அலங்காரங்கள் நடத்தி வரும் நிலையில், உடுமலையிலும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.
உடுமலை, தில்லை நகர் உள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த இரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பிரதோஷ இரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.
தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிஷேகம் செய்து இரத்தின லிங்கேஸ்வரர் மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை, பல பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.
--- பூஜா ராமகிருஷ்ணன்