புதுவையில் காங்கிரஸ் அரசு கவிழ காரணம் திமுகவா? -குழப்பத்தில் காங்கிரஸ்.!

புதுச்சேரியில் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று கவிழ்ந்தது. அதன்பின்னால் பாஜக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு திமுகவும் காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அதே நேரத்தில் புதுவை மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்து நாராயணசாமிக்கும் கிரண்பேடிக்கும் மோதல் போக்கே நிலவி வந்தது. “மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது” என்று நாராயணசாமியும், “புதுவை, யூனியன் பிரதேசம் ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் இருக்கிறது” என கிரண் பேடியும் தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வந்தனர்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை மாற்ற வேண்டும் என புதுவை முதல்வரான நாராயணசாமி, தொடர்ந்து 4 ஆண்டுகளாக பேசிவந்தார். இதனால், ஆளுநர் கிரண் பேடி மாற்றப்படுவாரா? என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுவையில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசே மாறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதை தொடங்கி வைத்தவர் ஒருகாலத்தில் காங்கிரஸின் புதுவை முகமாக பார்க்கப்பட்ட நமச்சிவாயம் தான். நாராயணசாமியை முதல்வராக டெல்லி தலைமை அறிவித்தது முதல் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்ட நமச்சிவாயம் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணா ராவ், ஜான் குமார் ஆகியோரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து புதுவை அரசையே ஆட்டம் காண வைத்தனர். இவர்களின் இந்த முடிவால் கடந்த 2016 இல் 19ஆக இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியின் பலம், 14 ஆக குறைந்தது. அதேநேரம் புதுவை சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களின் பலமும் 14 ஆக இருக்க, ஆட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் பாஜக,என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் நாராயணசாமி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் புதுவை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றிருந்த தமிழிசை சௌந்தரராஜனிடம் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதால் அதனை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் காங்கிரஸ் அரசு பிப்ரவரி 22ம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என உத்தரவிட்டார் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
அதனை ஏற்றுக்கொண்ட நாராயணசாமி தனது பெரும்பான்மையை 22ம் தேதி நிரூபிப்பதாக கூறினார். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி கூட்டணி மற்றும் எதிர்கட்சி கூட்டணி ஆகியோர் 14 உறுப்பினர்களுடன் சரி சமமாக இருந்தநிலையில், சபாநாயகர் வாக்குடன் காங்கிரஸ் ஆட்சி தப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் கூறிவந்தனர். ஆனால் அடுத்த நாள் நாராயணசாமி அரசுக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்க தயாராகியிருந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன். பிப்ரவரி 21ம் தேதி காலையில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர், தன்னால் காங்கிரஸ் அரசு கவிழவில்லை என்றும், அது முன்பே கவிழ்ந்துவிட்டது என்றும் கூறினார்.
சொந்த கட்சி எம்.எல்.ஏக்களே காங்கிரசை காலைவாரி விட்ட நிலையில், அன்று மாலையே மற்றொரு காலையும் வாரிவிட்டார் கூட்டணி கட்சியான திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன். பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த அவர், தனது பதவியை மட்டுமே ராஜினாமா செய்ததாகவும் தான் தொடர்ந்து திமுகவில் தொடர்வதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். அப்போதே காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதியாகிவிட்டது.
ராஜினாமா செய்த திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசனை கட்சி பொறுப்பில் இருந்து திமுக நீக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக கருத்து ஏதும் கூறாதது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதோடு திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் தனது ராஜினாமா பற்றி திமுக தலைமையிடம் கூறித்தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
புதுவையில் ஏற்கனவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுவந்தது. திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை வைத்து புதுவையை திமுக ஆட்சியமைக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்தது. ஜெகத்ரட்சகனும் திமுக ஆட்சியமைக்கும் என்று பேசி, பிறகு அதை மறுத்திருந்தார். அந்த பிரச்சனைகள் இப்போதுதான் ஓய்ந்தநிலையில் தற்போது திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசனின் ராஜினாமாவும், அதை தொடர்ந்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததையும், வெங்கடேசன் மேல் திமுக எந்த நடவடிக்கை எடுக்காததும் பல்வேறு கேள்விகளுக்கு காரணமாக அமைத்துள்ளது.
i want to sex with a lot of people
It looks pretty, it looks like the wrong color was bought
There are some attention-grabbing time limits in this article however I don’t know if I see all of them heart to heart. There’s some validity however I’ll take maintain opinion until I look into it further. Good article , thanks and we wish more! Added to FeedBurner as nicely
https://community.cbr.com/member.php?127476-12betAlso unequal Rid Fire, it aims at being more than philosophical doctrine to lifespan. Garena Unblock Give the sack players are live people, in that location are no bots. This struggle is named Garena {Free|Complimentary|Costless|G
tadalafil 40 mg daily tadalafil gel
tadalafil 30 mg