அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் போட்டியின்றி தேர்வு?

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் என கட்சின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு யாரை நியமிப்பது? என்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் காணொலி காட்சி மூலமாக நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சமீபத்தில் காலமானதால், இந்த பதவிக்கு கட்சியின் பொருளாளராக உள்ள துரைமுருகன் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. இதனால் பொருளாளர் பதவிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் எவ.வேலு ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகினது.

திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் இன்று விநியோகம் செய்யப்பட்டன. நாளை வேட்புமனு தாக்கல், 4 ம் தேதி வேட்புமனுக்கள்  மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வரும் 5ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்
வெளியாகிறது.

இந்தநிலையில், துரைமுருகனுக்காக பொதுச்செயலாளர் பதவிக்கான விண்ணப்தை திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் பெற்றுச்சென்றார். இதேபோல் டி.ஆர்.பாலுவுக்காக, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பொருளாளர் பதவிக்கான விண்ணப்பத்தையும் பெற்றுள்ளார். வேறு யாரும் இதுவரை மனுக்களை பெற வரவில்லை என கூறப்படுகிறது. எனவே வரும் 5 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வார்கள் என்று தெரிகிறது.

பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 3 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

19 Comments

 1. Fascinating blog! Is your theme custom made or did
  you download it from somewhere? A theme like yours with a few simple adjustements would really make
  my blog shine. Please let me know where you got your theme.
  Many thanks

 2. Hello! Would you mind if I share your blog with
  my twitter group? There’s a lot of people that I think would really appreciate
  your content. Please let me know. Many thanks

 3. you are truly a just right webmaster. The site
  loading pace is incredible. It seems that you are doing any unique trick.
  In addition, The contents are masterwork. you have performed a wonderful
  task on this subject!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button