உணவுமருத்துவம்மற்றவை

தண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடித்தால் நல்லது… வெந்நீர் அருந்துவது நல்லதா?…

நீர் இன்றி அமையாதது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. உலக உயிரினங்களின் உய்விற்கு மிக அவசியமான ஒன்றாக விளங்கும் நீரை, மக்கள் ஒவ்வொருவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மனிதனால் உணவு இன்றி கூட இருக்கலாம், ஆனால் தண்ணீர் இன்றி வாழ்வது மிகவும் கடினம். நமது உடலின் மொத்த எடையில் 70 சதவீதம் தண்ணீரால் நிரம்பியுள்ளது. வயது பாலினம் மற்றும் எடை அடிப்படையில் உடலில் நீரின் அளவில் மாறுபடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தண்ணீரில் உள்ள சத்துக்கள்

நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாது உப்புக்கள் கலந்திருக்கின்றன. அன்றாட வாழ்வுக்கு மிக அவசியமான தண்ணீர், உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற என ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. குறிப்பாக நுரையீரலில் 90 சதவீதம், ரத்தத்தில் 83 சதவீதம், மூளை தசையில் 75 சதவீதம், எலும்பில் 22 சதவீதம் தண்ணீர் உள்ளது.

வெந்நீர் அருந்துவது நல்லதா?

காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கமாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் வெந்நீர் குடிப்பது உண்டு. தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும் எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன.

வெந்நீர் குடிப்பதால் பலன்கள்

வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது. தாகம் எடுக்கும்போது, சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். குறிப்பாக அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

அதுசரி தண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடித்தால் நல்லது? என்பது பற்றி தற்போது பார்ப்போம்…

சிலர் உடற்பயிற்சி முடித்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.

பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். எனவே தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது, தண்ணீர் வயிற்றில் வேகமாக செல்வதால் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை பாதிக்கும். மேலும், சிறுநீரகத்தின் வடிகட்டும் தன்மை பாதிக்கப்படும். இதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதுடன், உடலின் நீர் சமநிலை பாதிப்படும்.

தண்ணீரை அமர்ந்து கொண்டு வாய் வைத்தே குடிப்பதே நல்லது. தண்ணீரை அவசர அவசரமாக குடிக்காமல் மெல்ல மெல்ல வயிற்றுக்குள் தண்ணீர் செல்லுமாறு குடிப்பது மிக அவசியம்.

குறிப்பாக சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. இவை செரிமான கோளாறை உருவாக்கிடும். தண்ணீர் மட்டுமல்ல மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.

எனவே தண்ணீரை முறைப்படி குடித்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button