தமிழ்நாடு

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா?- மமக தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி?

இராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி கமிட்டி பொறுப்பாளர் அருண்பிரகாஷ் இரு நாட்களுக்கு முன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இதை அறிந்த இந்து முன்னணி, பாஜக மற்றும் மருது சேனை அமைப்புகளின் சார்பில் அங்கு போராட்டம் செய்யப்பட்டது. மேலும் சமுகவலைதளங்களிலும் மத மோதல் என்றே பரப்புரை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹ.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என மத மோதலை உண்டுபண்ணும் விதமாக பதிவிட்டார்

ஆனால் காவல்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில் பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் எனத் தெரியவந்துள்ளது. இது பற்றி ராமநாதபுரம் காவல்துறை சார்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் “இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” எனக் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டார் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் தமிழக அரசு உத்தரவில் வருண்குமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து கருத்து பதிவிட்டுள்ள பதிவில் “ராமநாதபுரத்தில் இரு போதை பொருள் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் நடைபெற்ற படுகொலையை நேர்மையான முறையில் விசாரித்த மாவட்ட எஸ்பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

Related Articles

4 Comments

  1. I really love your blog.. Very nice colors & theme.

    Did you develop this website yourself? Please reply back as I’m planning
    to create my own website and would love to know where
    you got this from or just what the theme is named. Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button