பன்னீரை கழட்டிவிட்டு ஒற்றை தலைமைக்கு அடிபோடும் எடப்பாடி,. களமிறங்கப்பட்ட கொங்கு மு.அமைச்சர்கள்.! 

பன்னீரை கழட்டிவிட்டு ஒற்றை தலைமைக்கு அடிபோடும் எடப்பாடி,. களமிறங்கப்பட்ட கொங்கு மு.அமைச்சர்கள்.! 

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி யார் என்றே தமிழகத்தில் பலருக்கு தெரியாது. ஜெயலலிதா இறந்த பின் சசிகலா கட்சியை கைப்பற்றி எடப்பாடியை முதல்வராக அறிவித்தபோது யார் இந்த மனிதர்? என்று தான் தமிழகமே பார்த்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. தற்போதைய நிலவரப்படி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு தமிழகத்தில் சக்திவாய்ந்த நபர் எடப்பாடி பழனிசாமி தான். 

ஜெயலலிதா இருக்கும்போது அவரது நிழலாக இருந்த சசிகலாவையும், ஜெயலலிதா இருக்கும் போதே இரண்டு முறை முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தையும் வீழ்த்தி, தற்போது அதிமுகவில் சக்திவாய்ந்த நபராக உருவாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது பன்னீர் செல்வத்தை கழட்டிவிட்டு அதிமுகவின் ஒரே தலைவராக மாறும் முடிவில் இருக்கிறார். 

ஏற்கனவே கட்சியில் தன் பலத்தை எம். எல்.ஏக்கள் கூட்டத்தில் வெளிப்படுத்திய எடப்பாடி, தற்போது பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்கும் கட்சி நிர்வாகிகளை வளைக்கும் முடிவில் இருக்கிறார்.  இதில் எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். இவர்கள் முயற்சியின் காரணமாக தான் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த எம். எல்.ஏக்கள் கூட எடப்பாடி பக்கம் திரும்பியிருக்கிறார்கள். 

இந்நிலையில் தன்னை வந்து சந்தித்த கட்சி பிரமுகர்களிடம் " 2006 ம் ஆண்டு நடந்த தேர்தலில் அம்மா இருக்கும் போதே நாம் 61 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். ஆனால் தற்போது 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ளோம். இனி நாம் தான் கட்சி. இனி கட்சி ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டால் தான் சரியாக இருக்கும். அடுத்து உள்ளாட்சி தேர்தலும் நாம் தயாராகவேண்டும். மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்தால் எம்பி தேர்தலோட சட்டமன்றத் தேர்தலும் மறுபடியும் வரும். காத்திருப்போம், நல்ல முடிவு வரும்" என்று பேசியுள்ளார் என்று கூறுகிறார்கள்.