தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் முட்டைகள் கிடைக்குமா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

ஊரடங்கால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பள்ளி மாணவர்களுக்கு முட்டை போன்ற சத்தான உணவுகளை இலவசமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக இடைவெளி இல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்று பதிலளித்தார்.

சமூக இடைவெளி இல்லாமல் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது, ஆனால் சமூக இடைவெளி இல்லாமல் மதுக்கடையில் மது வழங்க எப்படி முடிகிறது? என தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊரடங்கால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் என்றும் முட்டைகளை தினந்தோறும் வழங்குவதா? அல்லது வாரத்திற்கு ஒரு முறை மொத்தமாக வழங்குவதா? என்பது குறித்து அரசே முடிவு செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும்,  ஏழை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் எப்படி விநியோகிப்பது? என்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Articles

8 Comments

  1. Do you have a spam issue on this website; I also am a blogger, and I was curious about your situation; we have developed some nice procedures and we are looking to swap methods with other folks, be sure to shoot me an e-mail if interested.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button