நடிகர் சிம்பு, நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிம்பு வாக்களித்தார்.
இதேபோன்று, நடிகை ஆண்ட்ரியா அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட கீழ்ப்பாக்கம் வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள், வாக்களிக்க செல்லும் போது முககவசம் கட்டாயம் அணியுங்கள் என்றார்.