படுக்கைகள் காலியாக இல்லை…கொரோனாவால் பிரபல நடிகையின் வீட்டில் நிகழ்ந்த சோகம்…

கொரோனா சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Piaa Bajpai in Lakshmy Ramakrishnan's next | Bollywood News – India TV

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பியா பாஜ்பாய் அஜித்தின் ‘ஏகன்’, வெங்கட் பிரபுவின் ‘கோவா’ மற்றும் மறைந்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பியாவின் சகோதரர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். இதனால் எனக்கு உத்திர பிரதேசம், ஃபாருகாபாத், கயம்கஞ்ச் பிளாக்கில் அவசர உதவி தேவை. ஒரு படுக்கையுடன் கூடிய வென்டிலேட்டர் வேண்டும், என் சகோதரர் இறந்து கொண்டிருக்கிறார்.. தயவு செய்து உதவி செய்யவும். நாங்கள் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கிறோம் என ட்விட்டர் மூலம் பியா உதவிக்கேட்டிருந்தார்.

https://twitter.com/PiaBajpai/status/1389390533857054722?s=20

ஆனால் அதன்பின் சில மணி நேரம் கழித்து தனது சகோதரர் மரணமடைந்து விட்டதாக பியா தெரிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Back to top button