கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகை சாக்‌ஷி அகர்வால்

கொரோனா பாதிப்பை தவிர்க்க அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு நடிகை சாக்‌ஷி அகர்வால் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தடுப்பூசி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Back to top button