எம்.ஜி.ஆராக மாறிய அஜித்….. போஸ்டர் ஒட்டிய தல ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் ‘தல’ அஜித்குமார் இன்று தனது 50-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளார்.

இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர் ஒலித்துகொண்டே இருக்கும்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவர் பிறந்தநாளான இன்று சமூக வலைதளங்களில் வாழ்த்து மழைகளால் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் தல அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த வகையில் மதுரையில் அஜித்தை எம்.ஜி.ஆர் ஆக சித்தரித்து பொன்மனச் செம்மலை என கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரின் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Back to top button