தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்… ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில்  திமுக   தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.  அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதனிடையே திமுக கூட்டணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ”சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”  என தெரிவித்துள்ளார்.

Back to top button