த்ரில்லர் படமாக உருவாகும் ‘டிரைவர் ஜமுனா’.. ஓட்டுநராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…

‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை ஐஸ்வர்ய ராஜேஷ், அதில் கால் டாக்ஸி ஓட்டுநர் வேடம் ஏற்றுள்ளார்.

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரீமேக் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படம் ஓரளவுக்கு முடிவடைந்த நிலையில்,  அடுத்ததாக ‘டிரைவர் ஜமுனா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை, 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி தயாரிக்கிறார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ளன.

டிரைவர் ஜமுனா படத்தின்  கதையைக் கேட்டதும் உடனடியாக ஓ.கே சொல்லியிருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இதைத்தொடர்ந்து படத்திற்கு அவர் கால் ஷீட் வழங்கவே, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

சென்னையில் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி பூஜைக்கு பின் படப்பிடிப்பை மும்முரமாக தொடங்கி நடத்தி வருகிறது படக்குழு. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம், கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாம்.  இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.

Back to top button