யோகி பாபுவை வீடியோ காலில் புகழ்ந்த கிரிக்கெட் வீரர்..!!!

யோகிபாபு நடித்த மண்டேலா படத்தை ஐதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில், யோகி பாபு நடித்த படம் மண்டேலா. விமர்சக ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், மண்டேலா படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து ரசித்துள்ளார் ஐதராபாத் அணி வீரர் ஸ்ரீவஸ்த் கோஸ்வாமி.

Shreevats Goswami - Biography, Height & Life Story | Super Stars Bio

இந்த படம் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, யோகி பாபுவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும் ஸ்ரீவஸ்த் கோஸ்வாமி
புகழ்ந்துள்ளார். மேலும், வீடியோ காலில் தொடர்பு கொண்டு யோகி பாபுவுடன் பேசியுள்ளார்.

Back to top button