இதெல்லவா உயர்ந்த லட்சியம்…. ஓட்டு போட்டு ஏர்போர்ட் போன நடிகர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒருபுறம் களைகட்டி கொண்டிருக்க நேற்று இணையத்தில் வைரலாக பேசப்பட்டது நடிகர் விஜய்யின் சைக்கிள் பயணம் தான்.

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்கு செலுத்த நடிகர் விஜய் சைக்கிளில் புறப்பட்டார்.

விஜய்யை தொடர்ந்து அவரது ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் பயணித்த நிலையில் விஜய் மாஸாக வாக்களிக்கும் மையத்திற்கு என்ட்ரி கொடுத்தார்.

விஜய் சைக்கிளில் வந்தது குறித்து பல தரப்பினர் பல விதமாக கருத்துக்களை தெரிவித்தனர்.

கருப்பு சிகப்பு சைக்கிளில் விஜய் திமுகவுக்கு ஆதரவாக வந்ததாகவும், பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் வந்ததாகவும் கருத்துகள் இணையத்தளத்தில் தீயாய் தெறித்தன, ஆனால் வீட்டின் அருகில் வாக்குசாவடி இருந்ததால் சைக்கிளில் வந்ததாக அவரது பிஆர்ஓ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த கையோடு நடிகர் விஜய் தனது 65வது படத்திற்காக ஆயத்தமாகி உள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

சட்டமன்ற தேர்தலுக்காக படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில் ஓட்டு போட்ட கையுடன் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் ஜார்ஜியா சென்றுள்ளார்.

நடிகர் விஜய் விமான நிலையத்தில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Back to top button