கமல் லோகேஷ் கனகராஜ் இணந்து உருவாக உள்ள விக்ரம் படத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தாதாக கார்த்திக் நடிப்பில் கைதி என்கிற படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பை பெற்றார்
இதனையடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி அதிலும் வெற்றியைப் பெற்றார்.
அடுத்ததாக, கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இப்படத்திற்கு விக்ரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்தன
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிப்பவர் யார் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு பேட்டியில் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில். இதற்கு முன்பு வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ்ப் படங்களில் அவர் நடித்துள்ளார்.