கலாபவன் மணி நினைவு விருது நடிகர் சம்பத் ராமுக்கு வழங்கப்பட்டது…

மறைந்த நடிகர் கலாபவன் மணியால் தொடங்கப்பட்ட கலாபவன் மணி சேவன சமிதி என்ற தொண்டு நிறுவனம் சார்பாக சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் சம்பத் ராமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மறைந்த நடிகர் கலாபவன் மணி அவர்கள் தொடங்கப்பட்ட கலாபவன் மணி சேவன சமிதி  என்ற தொண்டு நிறுவனம் சார்பாக நடிகர் சம்பத் ராமுக்கு ராமிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சான-3 திரைப்படத்தில் அகோரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர்-2019 க்கான கலாபவன் மணி நினைவு விருது  நடிகர் சம்பத் ராம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

2020 ஆண்டு கேரளாவில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது தற்போது சென்னையில் நேரடியாக  சம்பத் ராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வல்லரசு பட இயக்குநர் மகாராஜன், இயக்குநர் கணேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலையாளத்தில்  நடிகர் பிரிதிவிராஜ்,நடிகர் /இயக்குனர்  லால்,மூத்த இயக்குனர் ஜோஷி,நடிகர் நரேன் மற்றும் பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த விருதினை வாங்கியுள்ளது குறிப்பிடதக்கது.