தடுப்பூசி செலுத்திய பிறகு பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா..!

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பிரபல நடிகை நக்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actress-politician Nagma not sure about her comeback to films | Regional  News | Zee News

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளன. அதேசமயம் தடுப்பூசி போடும் பணிகளும் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களும் தயக்கமின்றி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனிடையே பிரபல நடிகை நக்மா  சமீபத்தில்  தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ஆனால் அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ,வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.