ஓடிடியில் வெளியாகும் செல்வராகவன் படம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “நெஞ்சம் மறப்பதில்லை” படமானது ஓடிடி  தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் மீண்டும் திரைப்படங்கள் ஓடிடி பாதைக்கு திரும்பியுள்ளன. ஏற்கனவே சமீபத்தில் வெளியான படங்கள் ஓடிடி தளங்களில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி மே 14 ஆம் தேதி  ஓடிடி தளமான ஜீ5 ல் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தில்  எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

image

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டப்பெற்றதோடு, படமும் கலவையான விமர்சனத்தைப் பெற்று ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button