அண்ணாத்த ஷூட்டிங் அப்புறம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி…. எதற்கு தெரியுமா..?

நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் ’அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பும் ரஜினி, படத்திற்கான டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார். அந்த பணிகள் முடிந்த பின் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக வரும் ஜூன் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Back to top button