ருக்மணி விஜயகுமாரின் யோகா வீடியோ… இணையத்தளத்தில் வைரல்

நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ருக்மணி விஜயகுமாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆனந்த தாண்டவம், பொம்மலாட்டம், காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ருக்மணி விஜயகுமார்.

அதுமட்டுமின்றி இவர் பரதநாட்டியம் மற்றும் யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், பரதநாட்டியம் மற்றும் யோகா பயிற்சியாளராகவும் செயல்பட்டுவருகிறார்.

தன்னுடைய நடனங்களையும் யோகா பயிற்சிகளையும் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதன்மூலம் இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றும் அவருடைய ரசிகர்கள் அவருடைய பதிவுகளுக்கு பேராதரவு கொடுத்துவருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் சேலை அணிந்தும் மிகவும் இலாவகமாக கடினமான யோகாக்களையும் ருக்மணி செய்துள்ளதே அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Back to top button