ஓடிடியில் வெளியாகுமா சல்மான் கான் படம்?

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வெளிவராமல் இருக்கும் ’ராதே’ படம் ஒடிடியிலும் தியேட்டரிலும் ஒரே நாளில் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் பிரபுதேவா சல்மான் கான் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக கருதப்படுகிறது. ராதே படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளனர்.ராதே படத்தில் ரந்தீப் ஹூடா, திஷா பாட்னி மற்றும் தமிழ நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் கொரிய படத்தின் ரீமேக். இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லம் முடிந்து வெளிவர தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சத்தால் இன்னும் வெளிவரவில்லை.

இதனால் ஒடிடியில் வெளிவர வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இதனை மறுத்துள்ள சல்மான் தரப்பில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி மே 13 ஆம் தேதி வெளிவரும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் படம் சொன்ன தேதியில் வெளிவருமா என கேள்வி எழுந்துள்ளது.

 

இதை பற்றி பேசிய சல்மான் கான் வரும் ரம்ஜானுக்கு ராதே திரைப்படத்தை வெளியிடு செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஊரடங்கு தொடர்ந்தால் அடுத்த ரம்ஜான் பண்டிகை அன்று தான் வெளியாகும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் ராதே திரைப்படம் ரம்ஜான் பண்டிகை அன்று ஓடிடி மற்றும் திரையரங்குகள் என இரண்டிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது

Back to top button